About WAMY

வாமி நிறுவனம்


முஸ்லிம் இளைஞர்கள் இன்று பல்வேறு கருத்தியல் ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பாதகமான சமூக கருத்தியல் அரசியல் ரீதியான கண்ணோட்டங்கள் அவர்களது கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலை பற்றி சகல முஸ்லிம்களும் வினயமாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. அதாவது இஸ்லாத்துக்கு சவாலாக உள்ள சகலவிதமான கருத்தியல்களையும் சிந்தனைகளையும் விட்டும் முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாத்து அவர்களை சீராக வழிநடாத்த வேண்டும்.


இவ்வகையில் இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி ஒரு சர்வதேச மாநாட்டை 1972 இல் ரியாத் நகரில் நடாத்தினர். இம்மாநாட்டின் விளைவாக இஸ்லாமிய இளைஞர்களுக்கான சர்வதேச பேரவையும் (றுயுஆலு) அதன் பொதுச் செயலகமும் நிறுவப்பட்டது. அன்று முதல் 'வாமி' நிறுவனம் ஒரு முன்னோடி முஸ்லிம் இளைஞர் அமைப்பாக உலகளாவிய இளைஞர்களை அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் உலகை முகங்கொடுக்கும் வகையில் அவர்களை கல்விசார் மற்றும் நிகழ்ச்சிகளினூடாக பயிற்றுவித்து வருகின்றது. மேலும் இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதோடு முஸ்லிம் இளைஞர்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் அது அயராது பாடுபடுகின்றது.


'வாமி' நிறுவனம் அதன் பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களுடாக நவீன உலகின் பிரச்சினை களிலிருந்து இளைஞர்கள் மீள பெரிதும் உதவிசெய்கிறது. அதேவேளை இயற்கை அனர்த்தங்களால் சிதைந்து போன இன முறுகல்களால் சிதறிப்போன உலகை மீளக் கட்டியெழுப்புவதில் பெருமுயற்சி எடுத்து வருகின்றது.


வாமி நிறுவனத்தின் பிரதானமானதும் முக்கியமானதுமான செயற்திட்டமாக கல்வி நிகழ்ச்சிகளே காணப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மாணவர்கள்ää வாலிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்றோறுக்கென பல் வகைப்பட்ட கல்விசார் நிகழ்ச்சிகளை வாமி நிறுவனம் அது இலங்கையில் நிறுவப்பபட்டது முதல் செயற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களது மேம்பாட்டை நோக்கா கொண்டு அதிகமான நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.

இலங்கையில் வாமி நிறுவனம் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல் 2007 ஆம் ஆண்டு வரை 1000 க்கும் மேற்பட்ட கல்விசார் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது. முற்றும் இந்நிகழ்ச்சிகளிலிருந்து நேரடியாக பயன்பெற்றோர்களது எண்ணிக்கை 400,000 க்கும் அதிகமாகும். இத்துடன் 200 க்கும் அதிகமான இஸ்லாமிய சங்கங்கள்ää அமைப்புக்களுடன் இனைந்தும் பல நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது.

You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)