இளம் விஞ்ஞானிக்கான கௌரவிப்பு நிகழ்வு

 

இலங்கை வாமிநிறுனம் வருடாந்தம் நடாத்திவரும் கல்வித்துறையில் சாதித்து வருவோரை தெரிவு செய்து ஊக்குவித்து கௌரவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 17ஆம் திகதி BMICH மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக துருக்கிநாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முன்னால் உயர்நீதிமன்றநீதிபதி சலீம்மர்ஸூப் கௌரவ பேச்சாளராகவும் கலந்து சிற்பபித்தனர்.

இந்நிகழ்வில் உலகில் வளர்ந்து வரும் துறையான Stem Cells மருத்துவதுறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுவரும், இத்துறை தொடர்பில் பல மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து சர்வதேசரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இளம்விஞ்ஞானியான ஸஹ்ரா மன்சூர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவரது துறையில் தொடர்ந்தும் ஆய்வுகளை தொடர ஊக்குவிக்கும் முகமாக வாமி நிறுவனம் சார்பாக வாமி இலங்கை கிளையின் பணிப்பாளாரான அஷ்ஷெய்க் நஜ்மான் அவர்களால் பண அன்பளிப்பும் வழங்கப்பட்டது. 

"இஸ்லாமியர்களின் வரலாற்று சாதனைகள்" என்ற  தலைப்பில் நீதிபதி சலீம்மர்ஸூப் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையின் போது இப்னுசீனா மருத்துவத்துறையின் முன்னோடி அதேபோல் இன்று வாமிநிறுவனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்படும் ஸஹ்ராமன்சூர் இன்ஷாஅல்லாஹ் இஸ்டெம்ஸெல் எனும் துறையில் இலங்கையில்முன்னோடியான பெண்ணாக எதிர்காலத்தில் திகழ்வார் என குறிபிட்டார்.

மேலும் துருக்கியின் இலங்கைகான தூதுவர் தனது உரையில் ஒரு பெண்ணாக நின்று இப்படியான துறையில் மேல்செல்வதென்பது மிகவும் சவாலான காரியம். ஒரு பெண்ணாக இருந்து இப்படியான புதுமையான துறையில் சாதித்து வருவது மிகவும் போற்றத்தக்கது எனவும் ஸஹ்ராமன்சூர் போன்ற திறமையான யுவதிகள் இஸ்லாமியர்களின் பொற்காலத்தை மீளக்கொண்டு வர உழைக்கத் தகுதியானவர்கள் என குறிப்பிட்டார்.

வாமியின்  இவ்வருடத்துக்கான கௌரவ விருதினை பெற்ற ஸஹ்ராமன்சூர் தனது உரையின் போது இன்றைய நாள் தனது வாழ்வில் முக்கிய மைல்கல் எனவும். இப்படியாக விருதொன்றை, பாராட்டொன்றை பெறுவது இது தான் தனது வாழ்வில் முதல் தடவை எனவும் இலங்கை வாமி நிறுவனத்தின் இவ்வாறான மகத்தான பணிகள் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கௌரவிப்பு நிகழ்வில் நாட்டின் சுமார் 100 துறைசார்ந்த கல்வியளாலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Update

(Other Medias)

Engal Thesam, Vidiyal

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் முதுமாணி கற்கை நெறியை பூர்த்தி செய்து வரும் பாத்திமா ஸஹ்ரா மன்சூர் மரபணு புனராக்கம் மருத்துவத் துறையில் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு துறையான இத்துறையில் இவர் செய்த ஆய்வுக் கட்டுரைத் தலைப்பில் சர்வதேச ரீதியாக பங்குபற்றியவர்களில் தெரிவு செய்யபட்ட ஆறுபேரில் ஒருவராக இலங்கையில் இருந்து ஸஹ்ராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாட்டுக்கு கிடைத்துள்ள கௌரவமாகும்.

புகழ் பேட்டர அமெரிக்க மருத்துவக் கவுன்சிலுக்கான ஆறாவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இளம் ஆய்வாளருக்கும், விஞ்ஞானிக்குமாக கிடைத்த சிறந்தொரு அங்கீகாரமாகும்.

பலாங்கொடையைச் சேர்ந்த இவர் அட்டுழுகம ஹஸ்ஸாலி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் மற்றும் பாயிஷா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமான இவர் தனது பி.எஸ்.சி. கற்கை நெறியை இந்தியாவின் பெங்களுர் பல்கலைக் கழகத்தில் உயிரியல் தொழிநுட்பத் துறையில் முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆய்வுக்கட்டுரை தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் அமெரிக்க பிலாதெல்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார். அதன்போது இவர் தனது ஆய்வுக் கட்டுரையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவியின் திறமையைப் பாராட்டியும் அவரது ஆய்வுத் துறையில் தொடர்ந்தும் புதிய ஆய்வகளை மேற்கொள்ளும் வகையில் அதனை ஊக்குவிக்கும் முகமாக கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை வாமி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன் கிழமை (17) ஏற்பாடு செய்து கௌரவித்திருந்தது.

இந்நிகழ்விற்கு துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இஸ்லாமியர்களின் வரலாற்றுச் சாதனைகள் என்ற தலைப்பில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் விஷேட உரை நிகழ்த்தினார்.

இதன்போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கான காசோலையை துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் தூதுவர் வழங்கியதுடன் மாணவிக்கான நினைவுச் சின்னத்தை கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


AB_1_800x600

 

AB_2_800x600

 

AB_3_800x600

 

AB_4_800x600

 

AB_5_800x600

 

AB_6_800x600

 

AB_7_800x600

 

AB_8_800x600

 

AB_9_800x600

 

AB_111_800x600

 

AB_11_800x600

 

AB_12_800x600

 

Zahra-Father-and-Mother

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)