ஆய்வாளர்களுக்கான கருத்தரங்கு

இலங்கை முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக தெரிவு செய்ய்பட்ட 10 தலைப்புக்களின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்களுக்கான செயலமர்வு நேற்று (31) கொழும்பு 3ல் அமைந்துள்ள ரேனுகா ஹோட்டலில் நடைபெற்றது.

குறிப்பிட்ட 10 கருப்பொருளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களிடமிருந்து கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனடிப்படையில் தெரிவு செய்ய்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் வளவாளர்களுக்கான செயலமர்வே நேற்று நடைபெற்றது.

 அகில இலங்கை கல்வி மாநாடு மற்றும் ராபிததுன் நளீமிய்யீன் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இச் செயற்றிட்டத்தின்படி தெரிவு செய்யப்படும் ஆய்வாளர்கள்கள் எதிர்வரும் டிசம்பருக்குள் தமது ஆய்வுகளை பூர்த்தி செய்து சர்ப்பிக்க வேண்டும் என்பதோடு ஆய்வு மானியமாக ஒரு தலைப்புக்கு ஒரு இலட்சம் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படிக் கருத்தரங்கில் தென்கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் முஹம்மட் நாஜிம்,பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். முஹமட், பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கலாநிதி உவைஸ் ஹனீபா, சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளா் வை.எல்.எம். நவவி, ஜெஸீமா இஸ்மாயில், பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், பேராசிரியா் பக்கீா் ஜவ்பர், பொறியியலாளர் அகா பாரி, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர், கலாநிதி முஹம்மட் நுபைல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம். என். அமீன், கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பளார் தாஜூதின், பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், வாமி நிறுவனத்தின பணிப்பாளர் நஜ்மான் உள்ளிட்ட 50க்கும் அதிகமான முஸ்லிம் கல்விமான்கள், துரைசார் நிபுணர்கள், புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆய்வுக்கான கருப்பொருள்கள் குறித்தும் அவற்றின் பின்னணிகள் குறித்தும் துறைசார்ந்தோர் விளக்கினர். பரீட்சைப் பெறுபேறுகள், பல்கலைக்கழக பிரவேசம், முதலானவற்றின் அடிப்படையில் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

தெரிவு செய்யப்பட்ட மூன்று ஆய்வு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதோடு அவை தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

ராபிததுன் நளீமிய்யீன் சார்பாக பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் நவவி, செயலாளர் அஷ்ஷெய்க் ஷாகிர், பொருளாளர் அஷ்ஷெய்க் ஷாபி ஹூஸைன், மற்றும் அஷ்ஷெய்க் நஜ்மான், அஷ்ஷெய்க் நஸூபர், அஷ்ஷெய்க் இஸ்பஹான் ஹாதி, அஷ்ஷெய்க் ஸல்மான் பாரிஸ், அஷ்ஷெய்க் ஜெஸார் ஜவ்பர் ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றி

ஜஸார் ஜவ்பர்

 

 

 

 

 

 

 

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)