இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கல்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் வறிய மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 30.12.2015ஆம் திகதி  கொழும்பு தபால் தலைமையாக கேட்போர் கூடத்தில் வாமி நிறுவனத்தின் சிறுவர் பராமரிப்பு பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆசியர்கள் ஒழுங்கமைப்பின் தலைவர் நாகொட அமரவன்ச தேரர் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் கௌரவ அதிதியாக பொலிஸ் உயர் அதிகாரி அன்ரத மகிந்தசிரி அவர்கள்  கலந்து சிறப்பித்தார்.

பிரதமஅதிதியாக கலந்து கொண்ட நாகொட அமரவன்ச தேரத் தமது உரையில்

"மதசகிப்புத் தன்மையும் இனங்களுக்கிடையலான நல்லுறவும் அருகி வரும் இப்படியான காலப்பிரிவில் இலங்கை வாமி நிறுவனம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் சகோதர இனங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு இப்படியான உதவிப்பணிகளில் ஈடுபடுவது மிகவும் போற்றத்தக்கது. மற்றும் எதிர்கால மாணவர்கள் சந்ததிகளின் மனதில் சகோதர இனங்கள் சம்பந்தமாக நல்ல மனப்பதிவுகளை பதிய வைக்க இப்படியான நிகழ்வுகள் மிக அவசியம். வாமி போன்ற நிறுவனங்கள் நிச்சயம் தொடர்ந்தேர்ச்சியாக இவ்வாறான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

கெளரவ அதிதிதியாக கலந்து கொண்ட பொலிஸ் உயர் அதிகாரி அன்ரத மகிந்தசரி தனது உரையில்

"இன்று நாட்டில் நடைபெறும் பல குற்றச் செயல்களுக்கு வறுமையே மூலகாரணம். கல்விகற்க வழியில்லாமல் பல மாணவர்கள் தமது சிறுபராயத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டப்படுகின்றனர். பாடசாலை செல்ல வசதியில்லாத பல மாணவர்கள் பாதாள உலக கும்பல்களுடன் சென்று சேர்ந்து கொள்கின்றனர். கல்விக்கு உதவும் இவ்வாறான உயரிய பணிகள் மூலம் இந்நிலைமைய பெருமளவு குறைக்க முயற்சி செய்யலாம். இலங்கை வாமி நிறுவனத்தின் இவ்வுயரிய பணிக்கு எமது ஆதரவும் பாராட்டும் என்றென்றும் இருக்கும்." என அவர் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கொழும்பு நகரை அண்டிய முஸ்லிம் முஸ்லிமல்லாத சுமார் 70 வறிய மாணவ மாணவிகளுக்கு பாடசாலை இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வாமி நிறுவனத்தின் வருடா வருடம் நாடளாவியரீதியில் தந்தையை இழந்த மாணவர்க்கும் மற்றும் வறிய மாணவர்க்கும் இலவச பாடாசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)