சிங்கள மொழிப் பயிற்சி முகாம்

சமகாலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன்றியமையாத தேவையாகிய சிங்கள மொழி மூலம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும், இஸ்லாம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எமது சகோதர இனத்தவர்களுக்கு  விளக்கமளித்து இஸ்லாம் மீதான் தப்பெண்ணத்தை கலையும் சமூக செயற்பாட்டளர்களை உருவாக்கும் நோக்கில் 15.01.2016 அன்று நளீமீயாவில் இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி முகாம் ஒன்று வாமி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில் சிங்கள மொழியின் முக்கியத்துவம்,

சிங்கள மொழியை இலகுவில் கற்பது எப்படி?

சிங்கள மொழியை படிப்பதன் அனுகூலங்கள்?

சிங்கள மொழியை சரளமாக பேசுவதற்கான பயிற்சி

என்பன தொடர்பில் கல்வி அமைச்சினதும் இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களின் முன்னணி விரிவுரையாளர்களாலும் பல முக்கிய விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஜேஏ விஜேரத்ன, எம்ஆர் திஸாநாயக, எம் திஸாநாயக, எச் ஏ எஸ் பீ குமார போன்றவர்கள் முக்கியமானவர்கள். 

இந்நிகழ்வின் இறுதி நாள் வைபவத்தில் நளீமீயாவின் உபஅதிபர் ஷெய்க் அகார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். “இப்பணி ஒவ்வொரு அமைப்பும் கட்டாயம் செய்ய வேண்டிய இக்காலத்துக்கு தேவையான இன்றியமையாத பணி” எனவும்

இப்படியான புது முயற்சியை ஆரம்பித்து வைத்த இலங்கை வாமி நிறுவனத்துக்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நளீமீயா கலாசாலையில் கல்வி பயிலும் 100மாணவர்கள் பயிற்சி பெற்று பயன் பெறும் வகையில் இம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

 

 

 

 

 


blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)