வறிய மாணவர்க்கான பாடசாலை உபகரணம் பகிர்தல்

இலங்கை வாமி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மற்றும் வறிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபம் ஒன்று 31.12.2015 ஆம் திகதி அநுராதபுர CTC வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ருவன் விஜேசிங்க கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையின் போது “ஒரு முஸ்லிம் அமைப்பு இனவேறுபாடு பார்க்காது வறிய மாணவர்களுக்கு உதவும் சந்தர்ப்பம் ஒன்றை முதல் முதலாக காண்பதோடு இத்தகைய பணிகள் நாட்டின் சகவாழ்வை கட்டியெழுப்ப இன்றியமையாதது” எனவும் குறிபிட்டார்.

இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித், அஷ்ஷெய்க் முனீர் முலப்பர், சமூக சேவை உத்தியோகத்தர் நிமல் லியனஆரச்சி, ஓய்வுபெற்ற அதிபர் அன்புஜவஅர்ஷா, அஷ்ஷெய்க் ராசித் நுஃமான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

இத்திட்டத்தின் மூலம் அநுராதபுரவைச் சேர்ந்த முஸ்லிம் முஸ்லிமல்லாத சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த தந்தையை இழந்த மற்றும் வறிய மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.

வாமி நிறுவனத்தின் வருடா வருடம் நாடளாவியரீதியில் தந்தையை இழந்த  மாணவர்க்கும் மற்றும்  வறிய மாணவர்க்கும் இலவச பாடாசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

DSCN7936_640x480DSCN8005_640x480DSCN7998_640x480


blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)